கடும் கடற் சமர் – பிரித்தானியாவின் கப்பல் எரிகின்றது

ஏமனின் ஹதீஸ் படையினரில் தாக்குதலில் சிக்கி கப்பல் ஒன்று செங்கடல் பகுதியில் தீப்பற்றி எரிவதாக பிரித்தானியாவின் கடல் கண்காணிப்பு அமைப்பு இன்று(31)  தெரிவித்துள்ளது.

yemen boat கடும் கடற் சமர் - பிரித்தானியாவின் கப்பல் எரிகின்றதுஏமனின் கொடிய்டா துறைமுகத்தில் இருந்து தென்மேற்காக 55 கடல் மைல்கள் தொலைவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரித்தானியாவின் எண்ணைத்தாங்கி கப்பலே எரிவதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட ஊடகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, அமெரிக்க கடற்படையினருக்கும் ஹதீஸ் கடற்படையினருக்கும் இடையில் கடும் கடற் சண்டை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேஸ்க் கங்சோ என்ற டென்மார்க்கின் சரக்கு கப்பலை கைப்பற்றும் நோக்கத்துடன் 4 அதிவேக தாக்குதல் படகுகளில் சென்ற ஹதீஸ் கடற்படையினரை தடுப்பதற்கு  அமெரிக்காவின் விமானந்தாங்கி கப்பலில் இருந்து விரைந்த இரண்டு அப்பாச்சி மற்றும் சி கிங் ஊலங்குவானூர்திகள் மீது ஹதீஸ் கடற்படையினர் தாக்குதலை மேற்கொண்டதாகவும், இந்த சமரில் 3 அதிகேவ படகுகள் மூழ்கடிக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

எனினும் உலங்ககுவானூர்திகளுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து அவர்கள் தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.

அதுசமயம், ஹதீஸ் படையினர் ஏவிய ஏவுகணைகளை அமெரிக்காவின் கார்னி என்ற டிஸ்ரேயர் கப்பல் சுட்டுவீழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

செங்கடலில் தாக்குதல்க அதிகரித்துவரும் நிலையில் அமெரிக்காவின் தலைமையில் அங்கு தாக்குதல்களில் இணைந்துகொள்வதில் இரந்து ஸ்டிபயின் இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.