அனுராதபுரத்தில் புத்தமயமாக்கப்பட்ட ஐயனார்

அனுராதபுரத்தில் உள்ள ஈசுரமுனி புத்த விகாரை, தமிழரின் ஐயனார் கோயிலாகும். தேவநம்பி தீசன் என்னும் மன்னரால் கட்டப்பட்டதாக இலங்கை தொல்லியல் துறை சொல்கிறது (ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியது). பல்வேறு கதைகள் சொல்லப்பட்டாலும் அவையின் உண்மைத்தன்மை கேள்விக்குறியானதேயாகும், என வேல்கடம்பன் ஈழப் பயணத்தில் ஆய்வில் கண்டறிந்த உண்மை என்ற தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்.

அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

குடைவரையான இக்கோயில் ஓர் ஐயனார் கோயில் என்பதை நிரூபிக்கும் வகையில் இங்கு ஐயனாரும், அருகேயே யானை மற்றும் குதிரை ஆகியவை புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. மேலும் மூலவர் வாயில் நிலை காலில் இருபுறமும் யானை உள்ளது. நிலை காலின் மேலே வேழத்திருமகள் உள்ளார். இவை ஆசிவகம் அல்லது ஐயனார் வழிபாடு நோக்கி நம்மை எடுத்து செல்கிறது.

ஈசுர முனி என்னும் பெயரே இவரை முனி என்கிறது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போதோ மூலவராக புத்தர் உள்ளார். இவ்வாலயம் போலவே இலங்கை தீவு முழுவதும் பல தமிழ் கோயில்கள் பல வகையில் பல்வேறு காலகட்டங்களில் புத்தமயமாக்கப்பட்டுள்ளது.

velkadamban அனுராதபுரத்தில் புத்தமயமாக்கப்பட்ட ஐயனார்