கச்சதீவில் கறுப்புக் கொடி போராட்டம்

எதிர்வரும் மே மாதம் 28 ஆம் இடம்பெறவுள்ள தமிழகத்தின் சட்டசபை தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் சனிக்கிழமை (23) அன்று கச்சதீவுக்கு அண்மையாகவுள்ள கடல்பகுதியில் கறுப்புக்கொடி ஏந்தி எதிர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ள தமிழக மீனவர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 100 படகுகளை சிறீலங்கா அரசு ஏலத்தில் விற்பனை செய்ய திட்டமிட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த கடல் பகுதியில் மீன் பிடிப்பதற்கு அனுமதி மறுக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மீனவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இந்த வாரம் கலந்துரையாடிலில் ஈடுபட்டிருந்த இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர் குழுக்கள் இது தொடர்பில் தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றியிருந்தனர். 1974 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய – இலங்கை உடன்பாட்டின் அடிப்படையில் கச்சதீவை இந்தியா இலங்கைக்கு வழங்கியிருந்தது.