ஐ.நாவில் சிறீலங்காவை  வலுவாக ஆதரிப்போம்- சீனா அறிவிப்பு

ஐ.நா மனித உரிமை அமர்வுகளில் இலங்கையை வலுவாக ஆதரிப்பதாக சீனா அறிவித்துள்ளது.

சிறீலங்காவின் அரசியல் ஸ்தீரதன்மை, இன ஒற்றுமை மற்றும் தேசிய நல்லிணக்கம் போன்றவற்றை சிறீலங்கா வலுவாக பேணுவதாகவே நட்பு நாடென்ற வகையில் சீனா நம்புகின்றது.   மேலும் தேசிய அபிவிருத்தி ம்றும் வளர்ச்சிக்கான சாதனைகளுக்காக வாழ்த்துக் கூறுகின்றோம்.மனித உரிமைகளை தீவிரமாக ஊக்கிவிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் நிலையான பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை முன்னேற்றவும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி பாதிக்கப்பட்ட குழுக்களின் உரிமைகளை பாதுகாத்தல், தேசிய நல்லிணக்கத்தை முன்னெடுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் போன்ற விடயங்களில் சிறீலங்காவின் முயற்சிகளையும் சாதனைகளையும் பாராட்டுகின்றோம்.

மேலும் மனித உரிமைகள் மீதான அரசியல் மயமாக்கல் மற்றும இரட்டை நிலைப்பாடு போன்றவற்றை சீனா எதிர்ப்பதோடு ஏனைய நாடுகளின் உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்வதை தவிர்க்க வேண்டும்.  சிறீலங்கா  குறித்த ஐ.நாவின் அறிக்கை தொடர்பாக கவலை அடைகின்றோம்.  சிறீலங்காவின் தகவல்களை உள்வாங்கப்படாமையிட்டு வருந்துகின்றோம்” என்று மேலும் தெரிவித்துள்ளார்.