ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்க வேண்டும் – ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுச் சின்னத்தை நேற்று நள்ளிரவு சிறீலங்கா இராணுவம் இடித்துள்ளதை டென்மார்ச் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன வன்மையாக கண்டிப்பதுடன் அங்கு இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளுக்கான அழுத்தங்களையும் சிறீலங்கா அரசு மீது பிரயோகிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் நிகோல விலும்சன் தெரிவித்துள்ளார்.

டென்மார்க்கில் உள்ள பெருமளவான மக்களுக்கு அங்கு இடம்பெற்ற கொடுமையான வரலாறு தெரியாது. முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற போரில் 40,000 தொடக்கம் 1,00,000 வரையிலான மக்கள் கொல்லப்பட்டிருந்தனர். அவர்களில் பெருமளவானோர் பாதுகாப்பு வலையம் என அறிவிக்கப்பட்ட இடங்களின் மீது சிறீலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள்.

இந்த படுகொலைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை நீதி விசாரணைகளை கோரிய போதும் சிறீலங்கா அரசு தொடர்ந்து மறுத்து வருகின்றது. இந்த நிலையில் தற்போது யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த நினைவுச் சின்னத்தையும் அழித்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.