ஏவுகணைகள் மூலம் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த சீனா

தென்சீனக் கடலிற்கு சீனா உரிமை கொண்டாடுவது தொடர்பாக அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்து வருவதால், அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக தென்சீனக் கடலில் விமானம் தாங்கிக் கப்பலைத் தாக்கி அழிக்கக்கூடிய இரண்டு ஏவுகணைகளை சீனா ஏவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனப் படையினரின் பயிற்சியின் போது அமெரிக்க உளவு விமானம் பறக்கத் தடை விதிக்கப்பட்டிருந்த பகுதியில் அனுமதியின்றி பறந்ததாக சீனா குற்றம் சாட்டியிருந்தது. இதனால் அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக DF – 26B, DF – 21D ஆகிய இரண்டு ஏவுகணைகளை தென்சீனக் கடலில் சீனா ஏவியுள்ளது. இதில் DF – 21 ஏவுகணை விமானம் தாங்கி கப்பலை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது எனக் குறிப்பிடப்படுகின்றது.

DF – 26B ஓர் இடைநிலைத் தூர அணுஆயுத ஏவுகணையாகும்.  இதை குயிங்காய் மாகாணத்தில் இருந்து ஏவியுள்ளது. DF – 21D ஐ ஜிஜியாங் மாகாணத்தில் இருந்து ஏவியுள்ளது