ஏப்ரல் 18 – இன்றைய நாள் இலங்கையில் பண்டா-செல்வா ஒப்பந்தம் முறிவடைந்த நாள்

பண்டாரநாயக்கா-செல்வநாயகம் ஒப்பந்தம், 1957 ஜூலை 26 அன்று அப்போதைய இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தைக் குறிக்கும்.

தனிச் சிங்களச் சட்டம், “இந்திய வம்சாவளியினர்” என கூறப்பட்ட தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு வந்த தமிழ் தோட்டத் தொழிலாளர் குடியுரிமை பறிப்பு, தமிழ்ப் பிரதேசங்களில் அத்துமீறிய குடியேற்றங்களினால் கொந்தளித்தெழுந்த தமிழ் மக்கள் ஆத்திரமடைந்து பல்வேறு வகையான அறவழி போராட்டங்களில் ஈடுபட்ட தமிழர்களை சமாதானப்படுத்தும் நோக்குடன் இந்த ஒப்பந்தம் பண்டாரநாயக்காவால் கைச்சாத்திடப்பட்டது.

பின்னர் இவ்வொப்பந்தத்தை எதிர்த்து ஒக்டோபர் 4, 1957 இல் ஜே. ஆர். ஜெயவர்த்தனா உட்பட பல இனவெறி கொண்ட சிங்களத் தலைவர்கள் பலரும் கண்டித்துஉ நடத்திய எதிர்ப்பு யாத்திரை காரணமாகவும் இனவெறி கொண்ட பௌத்த பிக்குகள் பலரும் தீவிரமாக எதிர்த்தமையாலும் இவ்வொப்பந்தம் நடைமுறைப் படுத்தப்படவில்லை.