எதிரணியினரை கைது செய்யும் ஆணையை கோட்டா பெற்றாரா? பொன்சேகா

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்வதற்கான மக்களை ஆணையை ஜனாதிபதித் தேர்தலில் அரசு பெற்றிருக்கிறதா என்று நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவை வெலிக்கடைச் சிறையில் சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்”

சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டிருப்பது நாட்டின் ஆட்சியாளர்கள் 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் அவர்கள் மேற்கொண்ட பழிவாங்கும் வேட்டையை, மீண்டும் தொடங்கியிருப்பதற்கான அறிகுறியை வெளிப்படுத்தியிருக்கிறது.

ரணவக்கவைக் கைது செய்வதை விட, அரசு சிந்திக்கவேண்டிய வேறு பல பிரச்சினைகள் உள்ளன. உண்மையான பிரச்சினை என்னவென்றால், முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் வாகனத்துடன், மோதி விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டி, 1,000 சிசி மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார், இது இலங்கையில் தடை செய்யப்பட்டது. அவரே வேகமாக வந்து சம்பிக்க ரணவக்கவின் வாகனத்துடன் மோதினார்” என்றார்.