சீரற்ற காலநிலை! ஐவர் உயிரிழப்பு

நாட்டில் நீடித்துள்ள சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர், பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சீரற்ற காலநிலையால் 19,095 குடும்பங்களைச் சேர்ந்த 65,294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

“13 மாவட்டங்கள் மழையுடனான வானிலையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் 125 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், 6,704 குடும்பங்களைச் சேர்ந்த 15,510 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

இதேவேளை, வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மலையகம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழையுடனான வானிலை தொடர்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.