உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் செயற் திட்டம் வவுனியாவில் ஆரம்பித்து வைப்பு

அரசின் வறுமை ஒழிப்பு செயற் திட்டத்திற்கமைய உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட சௌபாக்கியா உற்பத்தி கிராம நிகழ்ச்சித்திட்ட ஆரம்பநிகழ்வு வவுனியா மணிபுரம் கிராமத்தில் இன்று  இடம்பெற்றது.
DSC05472 உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் செயற் திட்டம் வவுனியாவில் ஆரம்பித்து வைப்பு
நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கு.திலீபன், நிகழ்வை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
DSC05478 உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் செயற் திட்டம் வவுனியாவில் ஆரம்பித்து வைப்பு
குறித்த திட்டத்தின் கீழ் வவுனியாவில் 10 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு கிராமத்திற்கும் 15 இலட்சம் ரூபாய்நிதி ஒதுக்கப்பட்டு திட்டம் செயற்படுத்தப் படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
DSC05485 உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் செயற் திட்டம் வவுனியாவில் ஆரம்பித்து வைப்பு
நிகழ்வில் மேலதிக அரச அதிபர், தி.திரேஸ்குமார், பிரதேச செயலாளர் நா.கமலதாசன் மற்றும் நிகழ்சி திட்டப்பணிப்பாளர் பொதுமக்கள், பயனாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
DSC00103 உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் செயற் திட்டம் வவுனியாவில் ஆரம்பித்து வைப்பு
அதே நேரம் இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக வவுனியா மாவட்டத்தில் குளங்களில் மீன் குஞ்சுகள் மற்றும் இறால் குஞ்சுகளை விடுவதற்காக 13 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
DSC00111 உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் செயற் திட்டம் வவுனியாவில் ஆரம்பித்து வைப்பு
இந் நிலையில் முதற்கட்டமாக வவுனியா தாண்டிக்குளம் குளத்தில் இன்று 15000 மீன் குஞ்சுகள் விடப்பட்டன.
DSC00105 உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் செயற் திட்டம் வவுனியாவில் ஆரம்பித்து வைப்பு
இந் நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபன், வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் தி. திரேஸ்குமார், பிரதேச செயலாளர் ந. கமலதாசன், தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் வவுனியா பெறுப்பதிகாரி யோ.நிசாந்தன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.