உளவு விமானத்தை தாக்கியதற்கு பதில் ஈரானின் இராணுவ கம் யூட்டர் மீது அமெரிக்கா சைபர் தாக்குதல்

அமெரிக்காவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்குப் பதிலடியாக ஈரானின் இராணுவக் கம்யூட்டர் அமைப்பின் மீது அமெரிக்கா சைபர் தாக்குதல் நடத்தியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த 2015இல் செய்து கொள்ளப்பட்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த ஆண்டு விலகியது. இதிலிருந்தே இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகின்றது.

ஈரான் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தது. ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் மற்ற நாடுகள் மீதும் தடை விதிப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது.