உலக சுகாதார அமைப்புடன் அமெரிக்கா மீண்டும் இணைவு- ஐ. நா வரவேற்பு

உலக சுகாதார அமைப்புடன் மீண்டும் இணையும் அமெரிக்காவின் முடிவை  ஐ.நா வரவேற் றுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பின் மீது கடுமையாகக் குற்றம் சுமத்திய  முன்னாள்  அதிபர் ட்ரம்ப், அந்த அமைப்புக்கு அளித்துவரும் நிதி  உதவியை நிறுத்தியதோடு  அதில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாகவும் அறிவித்தார்.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் அதிபராக பதவியேற்றுள்ளதையடுத்து  அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பில் மீண்டும் இணைந்து நிதியுதவி வழங்கும். உலக சுகாதாரக் கூட்டத்திலும்  அமெரிக்கா வருங்காலத்தில் பங்கேற்கும் என்று அறிவித்தார்.

அமெரிக்காவின் இம்முடிவை வரவேற்ற உலக சுகாதார அமைப்பு, ”கொரோனா வைரஸுக்கு எதிராக உலக நாடுகளின் முயற்சிகளுக்கு உலக சுகாதார அமைப்பை ஆதரிப்பது மிக முக்கியமானது. உலக சுகாதார அமைப்புடன்  அமெரிக்கா மீண்டும் இணைந்துள்ளது வரவேற்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளது.

அதே போல் பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவதாக புதிய அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளமைக்கும் ஐ.நா வரவேற்பு தெரிவித்துள்ளது.