உலகின் எரிபொருள் விநியோகத்திற்கு அமெரிக்கா தடையாக உள்ளது

ஆர்ட்டிக் எல்.என்.ஜி-2 என்ற எரிபொருள் விநியோகத் திட்டத்திற்கு அமெரிக்கா விதித்துள்ள தடை என்பது உலகின் எரிபொருள் விநியோக திட்டத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தாலக உள்ளதக ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சகம் கடந்த புதன்கிழமை(27) தெரிவித்துள்ளது.

மொஸ்கோவின் பொருளாதாரத்தை சீரழிப்பதற்கு அமெரிக்கா முயன்று வருகின்றனது. அதன் மூலம் உக்ரைனில் ரஸ்யா மேற்கொண்டுவரும் போரில் பாதிப்புக்கள் ஏற்படலாம் என அது நம்புகின்றது.

இந்த புதிய எரிவாயுத் திட்டம் கைடன் வளைகுடாவில் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இது ஒரு எரிசக்த்தி வர்த்தகத் திட்டம். இதன் மீதான தடை பல நாடுகளின் எரிபொருள் வினியோகத்திலும், பொருளாதாரத்திலும் பாதிப்புக்களை ஏற்படுத்தும். அமெரிக்கா எப்போதும் தன்னலன் சார்ந்தே செயற்படுவதுண்டு என அது மேலும் தெரிவித்தள்ளது.

எரிவாயு உற்பத்தியில் ரஸ்யா நான்காவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, கட்டார், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் முன்னனியில் உள்ளன.