போருக்கு தயாராகின்றது வடகொரியா

நாட்டின் படையினரை போருக்கு தயாராகுமறும் ஆயுத உற்றபத்தி, அணுவாயுதங்கள் மற்றும் வான்படையினரை போருக்கு ஏற்றவகையில் தயார் செய்யுமாறும்  வடகொரியாவின் அரச தலைவர் கிம் ஜொங் உன் கடந்த புதன்கிழமை(28) கட்டளையிட்டுள்ளார்.

புதுவருடத்திற்கான கொள்கை விளக்க கூட்டத்தில் பேசும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேற்கத்தைய நாடுகளுக்கு எதிரான கூட்டணியின் வியூகங்களை வடகொரியா வரவேற்கின்றது. நாம் எமது பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் அதற்கு ஏற்ப தொழில்த்துறை விருத்தி செய்யப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடகொரியா ரஸ்யாவுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வருகின்றது. அது ரஸ்யாவுக்கு ஆயத வினியோகங்களையும் மேற்கொண்டுவருவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தி வருகின்றது. அதேசமயம், வடகொரியாவின் படைத்துறைக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை ரஸ்யா வழங்கி வருகின்றது.

அண்மையில் வடகொரியா விண்ணில் செலுத்திய படைத்துறை உளவு செய்மதிக்கான தொழில்நுட்ப உதவிகளையும் ரஸ்யாவே வழங்கியிருந்தது.

கோவிட்-19 நெருக்கடியால் அதிக பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த வடகொரியாவில் கடந்த வருடம் காலநிலை சாதகமாக அமைந்ததால் அதிக விவசாய உற்பத்தியை அது அறுவடை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.