உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2ம் ஆண்டு நினைவு- ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் நிறைவு பெறுகின்றது.இந்த தாக்குதலி உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

IMG 0018 3 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2ம் ஆண்டு நினைவு- ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் இலக்கு வைக்கப்பட்டிருந்தது.

IMG 0020 1 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2ம் ஆண்டு நினைவு- ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

இந்த தாக்குதல்களில் 8 தற்கொலை குண்டுத்தாரிகள் உள்ளடங்களாக சுமார் 277 பேர் உயிரிழந்திருந்தனர்.

IMG 0016 2 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2ம் ஆண்டு நினைவு- ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

அத்துடன், இந்த தாக்குதல் சம்பவத்தில் 500ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

IMG 0008 1 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2ம் ஆண்டு நினைவு- ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

இந்நிலையில், ஏப்ரல் 21அன்று பயங்கரவாதிகளினால் இலக்குவைக்கப்பட்ட மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இன்று காலை விசேட வழிபாடு முன்னெடுக்கப்பட்டது.

Blood-splattered Jesus statue in a church in Negombo

பலத்த பாதுகாப்புக்கும் மத்தியில் இந்த சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

IMG 0004 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2ம் ஆண்டு நினைவு- ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

சீயோன் தேவாலயத்தின் மீதான தாக்குதலில் 31பேர் உயிரிழந்ததுடன் 80க்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

image0 7 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2ம் ஆண்டு நினைவு- ஆலயங்களில் சிறப்பு வழிபாடுimage4 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2ம் ஆண்டு நினைவு- ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் மரியன்னை ஆலயத்தில் இடம்பெற்றது

IMG 20210421 WA0010 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2ம் ஆண்டு நினைவு- ஆலயங்களில் சிறப்பு வழிபாடுIMG 20210421 WA0004 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2ம் ஆண்டு நினைவு- ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

அதே போல் வவுனியா தமிழ்விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பு மற்றும் கருமாரி அம்மன் ஆலய பரிபாலனசபையின் ஏற்பாட்டில்  உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

IMG 1670 1 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2ம் ஆண்டு நினைவு- ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

வவுனியா குட்செட்வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில்  நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டது.

01 8 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2ம் ஆண்டு நினைவு- ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மலையகத்திலும்  மௌன அஞ்சலி.

image1 4 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2ம் ஆண்டு நினைவு- ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் பல்கலையில் அஞ்சலி நிகழ்வு