உத்தரகாண்ட் : பனிமலை உருகி வெள்ளப்பெருக்கு -100க்கும் மேற்பட்டவர்கள் பலியானதாக தகவல்

உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிமலை உடைந்து உருகியதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பலர் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டம் ஜோஷிமாத் நகரில் உள்ள நானாதேவி பனிமலை இன்று திடீரென உடைந்துள்ளது. ரிஷிகங்கா மின்நிலையம் அருகே பெரிய அளவில் பனிப்பாறைகள் சரிந்து, வேகமாக உருகின. இதனால் தவுலிகங்கா நதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேரம் செல்லச் செல்ல ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்துகொண்டே சென்றதனால்,கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றங்கரையோரத்தில் உள்ள பல்வேறு வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.