உடனடியாக நாடாளுமன்றத்துக்குள் நுழையும் திட்டம் எதுவும் என்னிடம் இல்லை; பசில் அறிவிப்பு

உடனடியாக நாடாளுமன்றத்துக்குள் நுழையும் திட்டம் தம்மிடம் இல்லை என்று முன்னாள் அமைச்சரும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

19 ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது, சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் எவரும் அதனை ஆதரிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

பின்னர், 20 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்ற அடிப்படையில்தான் அவர்கள் அப்போது 19 ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு வழங்கினர் என்றும் பஸில் குறிப்பிட்டார்.

20 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதி கோட்டாபய மேலதிக அதிகாரங்களைப் பெறவுள்ளார் என்றும், அவரை ஜனாதிபதித் தேர்தலில் தெரிவு செய்ததன் மூலம், அதற்கான அதிகாரத்தை மக்கள் அவருக்கு வழங்கியுள்ளனர் என்றும் பஸில் சுட்டிக்காட்டியுள்ளார்.