உக்ரைன் மீது ரஸ்யா மேற்கொண்ட மிகப்பெரும் வான் தாக்குதல்

ரஸ்யா மேற்கொண்ட மிகப்பெரும் வான் தாக்குதலில் உக்ரைனின் பல பகுதிகள் தீப்பற்றி எரிவதாகவும், பெருமளவான பகுதிகள் அழிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பழுகின்றது. இதுவைர கிடைத்த தகவல்களின் அடிப்படையில் 30 பேர் கொல்லப்பட்டும் 150 இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தும் உள்ளனர்.

Tu 95MS உக்ரைன் மீது ரஸ்யா மேற்கொண்ட மிகப்பெரும் வான் தாக்குதல்கடந்த 26 ஆம் நாள் உக்ரைனின் வான்படையின் எஸ்யூ-24 விமானங்கள் பிரித்தானியாவின் ஸ்ரோம் சடோ ஏவுகணை மூலம் ரஸ்யாவின் தரையிறங்கு கலம் ஒன்றை தாக்கியழித்ததற்கு பதிலடியாக ரஸ்யா இன்று(29) காலை இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இந்த தாக்குதலில் ரஸ்யா 20 இற்கு மேற்பட்ட நவீன எக்ஸ்-31, எஸ்-300, கே.எச்-101 மற்றும் 555 வகை ஏவுகணைகளையும் ஐந்து விமானங்களில் இருந்து வீசியுள்ளது.

ஈரானிய தயாரிப்பான சுகிட் -136 ஆளில்லாத தாக்குதல் விமானங்கள், பலிஸ்ரிக் ஏவுகணைகள், குரூஸ் ஏவுகணைகள் உப்பட பல தரப்பட்ட 158 ஏவுகணைகைள் மற்றும் விமானங்களை ரஸ்யா பயன்படுத்தியுள்ளதாக உக்ரைன் வான்படையின் தளபதி யூரியா ஈனக்ட் தெரிவித்துள்ளார்.

லிவிவ், கார்கோவ், பகுதியில் உள்ள இராணுவ பயிற்சி தளங்கள் மற்றும் முக்கிய விநியோகத்தளங்கள், இராணுவ சேமிப்பு மையங்கள், ஏவுகணை தளங்கள், வான் பாதுகாப்பு தளங்கள், தலைநகர் கிவ் பகுதியில் உள்ள வான்பாதுகாப்பு மையங்கள் நேட்டோவின் படைத்தளங்கள், எரிசக்தி நிலையங்கள், விமானங்கள், தொழிற்சாலைகள், கார்கிவ் விமானநிலையம், விமானநிலையத்தின் தளங்கள், துறைமுகங்கள், எரிபொருள் சுத்தீகரிப்ப மையம், மற்றும் நிபுறோபற்றோவ் ஆகிய பகுதிகள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.