மகளிர் சங்கத்துக்கான உற்பத்திகளை அதிகரிக்க பொருட்கள் கையளிப்பு

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் இயங்கி வரும் மகளிர் சங்கத்துக்கான தளபாடங்கள் உள்ளிட்ட பை உற்பத்திகளுக்கான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. மகளிர்   சிறுவர் அலுவல்கள் மற்றும்  சமூக வலுபடுத்தல்  அமைச்சின் மகளிர்  பணியகத்தினால்   “திரியமம் பெத்த” நிகழ்ச்சி திட்டத்தின்கீழ்  குறித்த பொருட்களானது தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில்   சக்தி மகளிர் சங்க உறுப்பினர்களுக்கு  (28.12.2023) பை (Bag)உற்பத்திக்கான பொருட்கள்  மற்றும்  தளபாடங்கள்  பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த மகளிர் சங்கத்தின் உற்பத்தி மூலமாக அவர்களின் சுயதொழிலை விருத்தி செய்யும் நோக்கில் இத் திட்டம் நடை முறைப்படுத்தப்படுகிறது இதன் மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பை உற்பத்தி திறனை அதிகரிக்கவும் ஒரு வாய்ப்பாக காணப்படுகிறது.

இதில் தம்பலகாமம் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன்,சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சித்திக்,மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பாமினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.