உக்ரைன் போர் 5 வருடங்களுக்கு நீடிக்கும்

உக்ரைன் போர் 5 வருடங்களுக்கு மேல் நீடிக்கும் என யப்பானின் நிக்கி ஏசியா தெரிவித்துள்ளது. சீனா அதிபருடனான சந்திப்பின்போதே ரஸ்ய அதிபர் இந்த தகவலை வெளியிட்டுள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

ஆனால் யப்பான் பற்றியாட் ஏவுகணையை உக்ரைனுக்கு வழங்க முற்படுவது கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் தனது ஆயுதங்களை கையாளும் உரிமையை யப்பான்  இழந்துள்ளது அதனை அமெரிக்காவே கையாளிகின்றது எனவும் ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சகம் அண்மையிவ் தெரிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் படையினர் தமது ஊடறுப்பு தாக்குதலின் தோல்வியை மறைப்பதாக அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏயின் முன்னாள் ஆய்வாளர் லாறி ஜோன்சன் தெரிவித்துள்ள நிலையில் உலகத்தலைவர்களுடன் ஒப்பிடும்போது வெளிவிவகாரக் கொள்கைகளை வகுப்பதில் உக்ரைன் அதிபர் இந்த வருடம் தேர்ல்விடைந்துள்ளதாக த ஸ்ரேற்கிராப் ஊடகம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

அதேசமயம், வரவு செலவுத்திட்டத்தை சமளிக்க உடன் உதவி தேவை உக்ரைனின் பிரதமர் சிமிகல் கோரிக்கை. நாடு மிகப்பெரும் நெருக்கடியை சந்திக்கப்போகின்றது. புளும்பேர்க் ஊடகம்