ஈஸ்டர் தாக்குதலுடன்  தொடர்புபட்ட 257 பேர் தடுப்புக்காவலில் – அமைச்சர் சரத் வீரசேகர

ஈஸ்டர் தாக்குதலுடன் நேரடியாக தொடர்புபட்ட 257 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர  தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது சட்டமா அதிபரின் கைகளில் உள்ளது. மேலும் சட்டமா அதிபரை சந்தித்து அவர்கள் தொடர்பான வழக்கை துரிதப்படுத்த கோரிக்கை வைப்போம் என்றும் கூறியுள்ளார்.

ராஜபக்சே அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ள போதிலும் ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகளில் எந்தவித முன்னேற்றமும் தென்படவில்லை எனவும் குற்றவாளிகளை கண்டறிய அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என எதிர்க் கட்சி உறுப்பினர்கள் சபையில் கேள்வி எழுப்பிய வேளையில் அதற்கு பதில் தெரிவிக்கும் விதத்தில் அமைச்சர் சரத் வீராசேகர இதனைக் கூறினார்.

குற்றப்புலனாய்வு பிரிவு, பயங்கரவாத தடுப்பு பிரிவினால் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட 171 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 86 பேர் தடுப்புக்காவலில் உள்ளனர். மொத்தமாக 257 பேர் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாக அடையாளம் காணபட்டது. இவர்கள் குறித்த வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது என்றார்.