இலங்கை ரூபாவின் பெறுமதி வரலாறு காணாத வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி  மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது என்று மத்திய வங்கி  தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி இன்று ரூபா 202.04. ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் அமெரிக்க டொலரின் வாங்கும் விலை ரூபா 197.62 ஆக உள்ளதாக இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கடந்த ஆண்டு ஏப்ரல் 8ஆம் திகதி முதல் மார்ச் 12ஆம் திகதி  இலங்கை வரலாற்றில் டுதன் முறையாக அமெரிக்க டொலரின் பெறுமதி 200ஆக அதிகரித்தது.

இந்நிலையில், 2021ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் 12ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அமெரிக் டொலர் பெறுமதியுடன் ஒப்பீட்டளவில் இலங்கை நாணயத்தின் பெறுமதி நுாற்றுக்கு 5.2 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.