இலங்கையில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியதாக சந்தேகம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

இலங்கையில் கொரோனா நோய் தொற்றுக்குள்ளாகி உள்ளதாக சந்தேகிக்கப்படும் பத்து பேர் சிகிச்சை பெற்று வருவதாக அரசாங்க வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து பிரிவும் உடனடியாக தலையிட வேண்டும் என சங்கத்தின் செயலாளர் ஹரித அழுத்தே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த கருத்தினை வெளியிட்டார்.

தற்போது கொரோனால் வைரஸ் தொற்றுக்குள்ளாகியதாக சந்தேகிக்கப்படும் 10 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொதுமக்கள் முகத்தை மறைக்கும் வகையில் முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை எனவும் தேவையற்ற அச்சங்களை ஏற்படுத்தி கொள்ள வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில் கொழும்பு உட்பட பல பகுதிகளில் முகத்தை முறைக்கும் முக கவசங்களுக்கு பெரும் தடுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வைரஸ் தாக்கத்திற்கு அச்சப்பட்ட அதிக விலை கொடுத்து Face mask கொள்வனவு செய்ய வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஒரு Face mask ஒன்று சுமார் ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.