இலங்கையில் போதைப் பொருள் – ஆப்கானிஸ்தானின் குற்றச்சாட்டை மறுக்கும் பாகிஸ்தான்

தலிபான் தயாரிக்கும் போதைப்பொருள் பாகிஸ்தான் வழியாக இலங்கைக்கு கொண்டு சேர்க்கப்படுவதாக   ஊடகம் ஒன்றுக்கு ஆப்கானிஸ்தான் தூதுவர்  அஷ்ரப் ஹைதாரி கூறிய கருத்துக்களை கொழுப்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகாரியாலயம் நிராகரித்துள்ளது.

ஆப்பானிஸ்தானின் (Afghanistan ) இந்தக் கருத்தானது ஒரு நட்பு நாட்டின் குடிமக்களை தவறாக வழி நடத்தும் ஒரு முயற்சியாக காணப்படுவதாகவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கு இடமின்றி பயங்கரவாதத்திற்கு எதிரான உலகலாவிய போராட்டத்தில் பாகிஸ்தான் ஒரு முன்னணி நாடாக இருந்து வருகின்றது.

மேலும் போதைப் பொருள் கடத்தல் ஒரு கடுமையான குற்றம்,மற்றும் பாகிஸ்தானின் நர்கோ வர்த்தகத்தில் சரிபார்க்க பல நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது.

இது ஒரு சக்திவாய்ந்த போதைப்பொருள் தடுப்பு படையைக் கொண்டுள்ளது. அத்தோடு எல்லை தாண்டிய  பயங்கரவாதத்தை சரிபார்க்க மட்டுமல்லாது நர்கோ வர்த்தகர்கள் அதன் நுண்ணிய எல்லைகள் வழியாக செல்வதற்கான வாய்ப்பை முறியடிக்க பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையில் கடுமையான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகவும் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகாரியாலயம் சுட்டிக்காட்டியுள்ளது.