ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் ஐக்கிய நாடுகளின் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பு (UNIDO) ஆகியவற்றின் நிதியுதவியின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் BESPA-FOOD திட்டமானது, இலங்கையின் தெங்கு உற்பத்தியின் ஏற்றுமதி வருமானத்தை 2 பில்லியன் டொலராக மாற்றுவதற்கு தேவையான பத்து ஆண்டு கால மூலோபாய திட்டத்திற்கு ஆதரவளிக்கிறது.
தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு அண்மையில், தென்னை மேம்பாட்டு ஆணையம் (CDA), தென்னை ஆராய்ச்சி நிறுவனம் (CRI), தென்னை பயிர்ச்செய்கை சபை (CCB) மற்றும் இலங்கை தெங்கு உற்பத்தி தொழிற்சாலை (CCCI) உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களை இணைத்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தது.
தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி இது குறித்து தெரிவிக்கையில்,
இலங்கையில் தெங்கு உற்பத்தித் தொழிலானது முக்கிய தொழிலாக விளங்குகின்றது. BESPA-FOOD திட்டத்தின் மூலம் தெங்கு உற்பத்தித் தொழிலின் போட்டித்தன்மை மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்ய முடியும்.
BESPA-FOOD திட்டமானது தெங்குத் தொழிலில் ஏற்படும் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதற்கு உதவுகின்றது.
BESPA-FOOD திட்டத்தின் மூலம் இலங்கையில் நிலையான பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவளித்து வருகின்றது.
இந்த திட்டம் உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்துதல், விநியோக செயல்திறன், மதிப்பீட்டை மேம்படுத்துதல் மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் தொழில்துறையின் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துகின்றது எனவும் தெரிவித்தார்.



