இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர்களை வழங்க நாணய நிதியம் இணக்கம்

இலங்கை அரசுக்கும் அனைத்துலக நாணய நிதியத்திற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுக்களில் அதிகாரிகள் மட்டத்திலான உடன்பாடு எட்டப்பட்டதுடன், 2.9 பில்லியன் டொலர்கள் நிதி உதவியையும் வழங்க அனைத்துலக நாணய நிதியம் சம்மதித்துள்ளது.

எனினும் இந்த நிதியானது எதிர்வரும் 48 மாதங்களில் பகுதிகளான வழங்கப்படும் என அனைத்துலக நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இந்த உடன்பாட்டில் பல நிபந்தனைகளை அனைத்துலக நாணய நிதியம் முன்வைத்துள்ளது.

வரி உயர்வு, எரிபொருட்களின் விலை அதிகரிப்பு, அரசு மேற்கொள்ளும் கொடுப்பனவுகளின் நிறுத்தம், சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறையின் மறுசீரமைப்பு, அரச பணியாளர்களை குறைத்தல், சுங்கவரி அதிகரிப்பு, வங்கி துறையின் மறு சீரமைப்பு என்பன அதில் அடங்கும்.