தென்மராட்சியில் வெற்றியளித்த சிறுபோக நெற்செய்கை

வழமையாக பெரும்போக நெற்செய்கையே வடபகுதியில் மேற்கொள்ளப்படுகையில் தற்போது பரீட்சாத்தமாக மேற்கொள்ளப்பட்ட சிறுபோக நெற்செய்கை வெற்றிபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடபகுதியில் பாரிய குளங்களோ அல்லது ஆறுகள் மற்றும் வாய்க்கால்களோ இல்லாத நிலையில் அங்கு பருவகால மழையை நம்பி செய்யப்படும் பெரும்போக நெற்செய்கையே மேற்கொள்ளப்படுவதுண்டு.

இருந்தபோதும், தென்மராட்சி கச்சாய் பகுதியில் இரு விவசாயிகள் மேற்கொண்ட சிறுபோக நெற்செய்கை வெற்றிபெற்றுள்ளது. கச்சாய் குளத்தில் உள்ள நீரை பயன்படுத்தியும், அவ்வப்போது பெய்த மழை நீரை பயன்படுத்தியும் இந்த நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

1990 களில் வடக்கு நவாலியில் உள்ள குளத்தின் நீரை பயன்படுத்தி இவ்வாறு ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது. சின்னத்துரை என்ற விவசாயி இந்த முயற்சியை மேற்கொண்டிருந்தார்.