இராணுவ மயப்படுத்தலுக்கு எதிராக வவுனியாவில் சுவரொட்டிகள்

“இராணுவமயப்படுத்தலுக்கு எதிராக தொழிலாளர் , விவசாயிகள், மீனவர்கள் ஒன்றிணைந்து இடதுசாரி கட்டமைப்பை கட்டியெழுப்புவோம்“ என வவுனியாவில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

புதிய தாராளவாத முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் மற்றும் இராணுவமயப்படுத்தலுக்கு எதிராக தொழிலாளர் , விவசாயிகள், மீனவர்கள் ஒன்றிணைந்து இடதுசாரி கட்டமைப்பை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளுடன் வவுனியா நகரின் பல்வேறு இடங்களில் இந்த சுவரொட்டிகள் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

IMG20210430104343 01 இராணுவ மயப்படுத்தலுக்கு எதிராக வவுனியாவில் சுவரொட்டிகள்

நாளைய தினம் (01.05) தொழிலாளர் தினம்  வருவதனால் அனைவரும் எவ்வித  பாகுபாடும் இன்றி ஒன்றிணைந்து மேதினத்தினை இடதுசாரி கட்டமைப்பை கட்டியெழுப்பும் நோக்கில் இடதுசாரி மேதினமாக பிரகடனப்படுத்தி தொழிலாளர் , விவசாயிகள், மீனவர்கள் ஒன்றிணைந்து செயற்படுவோம் என குறித்த சுவரொட்டிகள் வவுனியா நகர் உட்பட பல்வேறு பகுதிகளில் இன்று (30) காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ் சுவரொட்டிகள், இலங்கைக்கான சோசலிச கட்சியினரால் உரிமை கோரி காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.