உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- ரிசாத்திற்கு கேரளாவுடன் உள்ள தொடர்புகள் – இந்திய புலனாய்வு பிரிவினர் விசாரணை

கடந்த 2019ம் ஆண்டு  உயிர்த்த ஞாயிறு நாள் அன்று நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீனிற்கும் கேரளாவிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து    இந்திய புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கேரளாவின் மததலைவர்கள் சிலர் இலங்கையில் ரிசாத்பதியுதீனை சந்தித்துள்ளதுடன் 2013 இல் சென்னைக்கு விஜயம் மேற்கொண்டவேளை அவர் குறிப்பிட்ட மததலைவர்களை சந்தித்துள்ளார்.

ரிசாத்பதியுதீனின் தந்தை Padna in Kasaragod என்ற பகுதியை பூர்வீகமாக கொண்டவர் என தெரிவித்துள்ள புலனாய்வு அதிகாரிகள், அவர் அந்த பகுதியில் உள்ள சிலருடன் தொடர்பிலிருந்தார் எனவும் தெரிவித்துள்ளனர்.

புலனாய்வு பணியகமும் தேசிய விசாரணை முகவர் அமைப்பும் ஏற்கனவே இலங்கை அரசாங்கத்திற்கு இது தொடர்பான விசாரணைகளில் ஒத்துழைப்பை வழங்கியுள்ளன.

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டஜஹ்ரான் ஹாசிமுடன் சமூகஊடகங்கள் மூலம் தொடர்பை பேணிய தமிழ்நாட்டை சேர்ந்த ஐஎஸ் ஆதரவாளர் ஒருவரை 2019 ஜூன் மாதம் தேசிய புலனாய்வு முகவர் அமைப்பை சேர்ந்தவர்கள் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், கைதுசெய்யப்பட்டுள்ள  ரிசாத்பதியுதீனிற்கும் கேரளாவிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து வெளியான தகவல்களை  உறுதி செய்வதற்காக கேரள காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொள்வார்கள் என மாநிலத்தின் தலைமை காவல்துறை அதிகாரி லோக்னாத் பெகேரா தெரிவித்துள்ளார்.

நன்றி- New Indian Express