இரணைதீவில் கடலட்டை கிராமம் அமைக்க நடவடிக்கை

இரணைதீவில் கடலட்டை கிராமம் ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இரணைதீவை அண்டிய கடல் பிரதேசத்தில சுமார் 60 ஹாக்ரேயர் விஸ்தீரமான  பகுதியில் கடலட்டை வளர்ப்பிற்கு பொருத்தமான சூழல் இருப்பது ஆய்வுகளின் மூலம் கண்றியப்பட்டுள்தாக தெரியவருகிறது.

கடந்த பல ஆண்டுகளாக யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்திருந்த மக்கள் அண்மையில் இரணைதீவில் மீளக் குடியேறியிருந்தனர். எனினும், கடற்றொழில் நம்பி வாழுகின்ற இரணைதீவு மக்களின் புனர்வாழ்வுக்கு கடந்த அரசாங்கத்தினால் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது.iranaitheevu map இரணைதீவில் கடலட்டை கிராமம் அமைக்க நடவடிக்கை

குறித்த பிரதேசத்தில் கடலட்டை கிராமம் உருவாக்க்படும் பட்சத்தில் இணைதீவில் மீளக் குடியேறியிருக்கும் மக்களின் மக்களின் வாழ்வாதாரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் .

குறிப்பாக அடையாளப்படுத்தப்பட்ட குறித்த பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள கடலட்டை கிராமத்தின் மூலம் 350க்கும் மேற்பட்ட இரணைதீவு மக்கள் வேலை வாய்ப்பை பெற்றுககொள்வதோடு வருடாந்தம் சுமார் 3 கோடி ரூபாய் வருமானத்தையும் ஈட்டிக் கொள்ள முடியும் என்று துறைசார் நிபுணர்களினால் மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.