இன்று பதவியைத் துறக்கிறார் ரணில் – இடைக்கால அரசு அமைக்கத் திட்டம்

சிறீலங்காவில் இடம்பெற்ற அரச தலைவர் தேர்தலில் தனது கட்சி படுதோல்வியடைந்ததால் பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்கா இன்று (20) துறக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

இன்று மாலை புதிய அரச தலைவர் கோத்தபாய ராஜபக்சாவை சந்திக்கும் ரணில் விக்கிரமசிங்கா அதன் பின்னர் பதவியை துறக்கும் அறிவித்தலை வெளியிடவுள்ளார்.

புதவிவிலகலின் பின்னர் சிறிய இடைக்கால அரசு ஒன்று அமைக்கப்படுவதுடன், எதிர்வரும் மார்ச் மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக அரச தi-லவர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த இடைக்கால அரசில் 15 பேர் கொண்ட அமைச்சரவை அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, சிறீலங்காவின் அரசியலில் அதிக செல்வாக்குச் செலுத்தும் இரு பௌத்த பீடங்களில் ஒன்றான அஸ்கிரிய பீடத்தின் மடகாம தம்மானந்தா தேரர் ரணில் உடனடியாக பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கையை நேற்று முன்வைத்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.