சர்வதேச எழுத்தறிவு தினம் இன்றாகும். ‘மக்கள், பூமி மற்றும் வளமான வாழ்விற்கான எழுத்தறிவு’ என்பது இம்முறை அதன் கருப்பொருளாகும்.
யுனெஸ்கோ அமைப்பின் கூற்றுப்படி, இந்த கருப்பொருள் உள்ளடக்கம், மேம்பாடு, நிலையான எதிர்காலத்திற்கு ஆதரவளித்தல் மற்றும் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதில் எழுத்தறிவின் பங்களிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
எழுத்தறிவின் முக்கியத்துவம் குறித்து உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில், யுனெஸ்கோ தனது 14 ஆவது பொது மாநாட்டில் இந்த தினத்தை அறிவித்ததுடன், 1967 ஆம் ஆண்டில் முதலாவது சர்வதேச எழுத்தறிவு தினம் நினைவு கூரப்படுகிறது.
இதேவேளை, இலங்கையில் எழுத்தறிவு விகிதம் 97.4% ஆக உயர்ந்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



