இன்புலுவன்சா வைரஸினால் பாதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இன்புலுவன்சா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் மழை மற்றும் குளிருடனான வானிலை காரணமாக, இன்புலுவன்சா நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விசேடமாக, கர்ப்பிணிகள், 2 வயதுக்குக் குறைந்த குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர், நோயெதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள், இதயம், கல்லீரல், சிறுநீரகம், நீரிழிவு, புற்றுநோய்களுக்கு இலக்கானவர்களையும், இந்நோய் தாக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

காய்ச்சல், இருமல், தடிமன் போன்ற நோய்கள் ஏற்பட்டால், உடனடியான வைத்திய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.