இனப்பிரச்சனை தொடர்பில் புதிய அரசுடன் பேசுவதற்கு தயார் – கூட்டமைப்பு

சிறீலங்காவில் பதவியேற்றிருக்கும் புதிய அரசுடன் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக உள்ளதாகவும் ஆனால் அதற்கான அழைப்பு அரச தலைவர் அல்லது பிரதமரிடம் இருந்து கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

எல்லா இனங்களுடனும் இணைந்து பணியாற்ற விருப்பம் உள்ளதாக அனுராதபுரத்தில் கோட்டபாயா தனது பதவியேற்பின் போது தெரிவித்திருந்தார். அதனால் தான் நாம் அவருடன் பேசுவதற்கு தீர்மானித்துள்ளோம்.

சஜித் பிரேமதாசாவின் கைகள் சுத்தாக இருப்பதால் நாம் அவரை ஆதரித்தோம். இனப்பிரச்சனைக்கு தீர்வு, காணாமல்போனோர் பிரச்சனை, ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் தொடர்பான பிரச்சனை, அரசியல் கைதிகள் தொடர்பான விடயங்களையே நாம் பேசத் தீர்மானித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.