இந்நாட்டில் தமிழ் ஆட்சி மொழியானதற்கு விடுதலைப்புலிகளே மூலகாரணம் – அமைச்சர் மனோ

கடந்த 1987 ஆண்டு 13 ஆம் திருத்தச் சட்ட மூலத்தினால், மாகாண சபைகளுக்கான அதிகாரப்பகிர்வு வந்தது. அதேபோன்று கடந்த 1988 ஆண்டு 16 ஆம் திருத்தச் சட்டத்தினால்  இந்நாட்டில் தமிழும் ஆட்சி மொழி ஆகியது. இவை இரண்டும் இலங்கை அரசியலமைப்பில் கொண்டுவரப்பட விடுதலைப்புலிககளின் போராட்டமே மூல காரணம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்று, இந்த இரண்டு திருத்தங்களையும் காப்பாற்றி முன்-நகர்த்த எம்மால் முடியும். அதை நோக்கியே நான் சிந்திக்கிறேன். இந்த தெளிவு எனக்கு இருக்கிறது. இது நம் எல்லோருக்கும் இருக்க வேண்டும். முக்கியமாக தமிழ், முஸ்லிம் தலைவர்களுக்கு இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வத்தளையில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துக்கொண்ட உரையாற்றிய போதெ அமைச்சர் மனோ இதனைக் கூறியுள்ளார்.