இந்த வருடம் பூட்டீனும் டிறம்பும் வெற்றிபெறலாம் – கருத்துக்கணிப்பு

இந்த வருடம் ரஸ்யாவில் இடம்பெறும் அரச தலைவர் தேர்தலில் தற்போதைய அரச தலைவர் விளமிடீர் பூட்டீன் எதிர்தரப்பு வேட்பாளரை இலகுவாக தோற்கடிப்பார் என லி.பிகாரோ நாளேடு தனது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.

உக்கிரைனையும், மேற்குலக கூட்டணியையும் அவர்களின் எல்லைக்கு தள்ளவதுடன், தன்னையும் பலப்படுத்தும் ஆண்டாகவே 2024 இருக்கப்போகின்றது. உக்ரைன் மீதான படைநடவடிக்கை மூன்றாவது ஆண்டுக்குள் நுளைகின்ற இந்த தருணத்தில் ஆரம்ப புள்ளி ரஸ்ய அதிபருக்கு அனுகூலமாகவே உள்ளது.

மறுவளமாக அமெரிக்க தேர்தலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் செல்வாக்கு சரிந்து வருகின்றது. உக்ரைனின் களநிலமைகள் பைடனின் வெற்றிக்கு கைகொடுக்கப்போவதில்லை. எனவே தான் உக்ரைனுக்கான படைத்துறை உதவிகளை அமெரிக்கா குறைத்து வருகின்றது. அதுவும் பூட்டீனுக்கு அனுகூலமாகவே அமைந்துள்ளது.

வெள்ளை மாளிகைக்கு டொனால்ட் டிறம் வருவது மெல்ல மெல்ல உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பைடனுக்கான ஆதரவுகள் அதிகளவு குறைந்து வருவது ஒருபுறம் இருக்க அவர் மீதான குற்றச்சாட்டுக்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

2021 ஆம் ஆண்டில் இருந்து அவர் 418 நாட்கள் விடுமுறையை எடுத்துள்ளதாகவும், இது அவரின் அதிபருக்கான பதவிக் காலத்தில் 40 விகிதம் எனவும் விடுமுறைகளை கண்காணிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.