இந்திய – சீன எல்லைப் பிரச்சினை இரு நாட்டு உறவிலும் ஆதிக்கம் செலுத்தாது அமெரிக்காவிற்கான சீனத் தூதுவர்

இந்திய – சீன எல்லைப் பிரச்சினை இரு நாட்டு உறவுகளிலும் ஆதிக்கம் செலுத்தாது என்று தான் எண்ணுவதாக அமெரிக்காவிற்கான சீனத் தூதுவர் கூறியுள்ளார்.

இந்திய – சீன எல்லைப் பிரச்சினை கடந்த ஜுன் மாதம் மோதலாக உருவெடுத்தது. கடந்த ஜுன் மாதம் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கின் இந்தியப் பகுதிக்குள் சீன வீரர்கள் நுழைய முற்பட்ட போது, அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதில் ஏற்பட்ட மோதலில் 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். சீனத் தரப்பில் 40 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த மோதலுக்குப் பின்னர் இரு நாட்டு உறவுகளும் மோசமடைந்துள்ளன. சீன நிறுவனங்களின் நூற்றிற்கும் மேற்பட்ட சீன நிறுவன செயலிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சீனப் பொருட்களின் இறக்குமதிக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அமெரிக்காவில் பாதுகாப்பு மன்ற விவாதத்தில் அந்நாட்டிற்கான சீனத் தூதுவர் குய் தியான்கய் பங்கேற்று பேசும் போதே எல்லைப் பிரச்சினை சீன – இந்திய உறவுகளிற்கிடையே ஆதிக்கம் செலுத்தும் என்று தான் நினைக்கவில்லை. இந்திய நண்பர்களின் பார்வையும் இது தானா என்பது எனக்குத் தெரியாது என்று கூறினார்.