இந்தியா – பாகிஸ்தான் எல்லை கிராம மக்களின் நிலை

இந்தியா – பாகிஸ்தான் நாடுகளைப் பிரிக்கும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியை காண சென்ற ஒரு ஊடகவியலாளர் தனது கருத்தை விபரிக்கின்றார். இந்தியா – பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகிலுள்ள பாகிஸ்தான் நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள சகோத்தி பகுதி மக்களிடம் அவர் உரையாடியுள்ளார்.

இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்திலிருந்து 100 கிலோமீற்றர் தொலைவில் சகோத்தி பகுதி உள்ளது. இப்பகுதி இந்தியா மற்றும் பாகிஸ்தானிடையே தற்போது நடந்து வரும் மோதல் மற்றும் பதற்றம் காரணமாக இப்பகுதி மக்கள் பொருளாதார ரீதியாக பல சிரமங்களை சந்தித்து வந்தாலும், இப்பகுதியில் பணியில் உள்ள அதிகளவான இராணுவத்தினால் தங்களின் கவலைகளைக்கூட மெல்லிய குரலிலேயே பேச முடிகின்றது.

தாங்கள் நாட்டிற்காக உயிரைவிடவும் தயாராக இருப்பதாகவும், தற்போது அமைதியான சூழலில் தாங்கள் வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் கூறினார்கள்.

இந்தப் பகுதி பற்றி பொது மகன் ஒருவர் பேசும் போது, தான் ராவல்பிண்டி என்னும் இடத்தில் வசித்து வந்ததாகவும், தற்போது சகோத்தி பகுதியில் வந்து குடியேறியுள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த நகரில் 5 கிலோமீற்றர் சுற்றளவில் தான் பாதுகாப்பாக வாழ முடியும் என்றும், அதற்கு அதிகளவில் செலவாகும் என்பதும்  குறிப்பிடக்கூடிய விடயமாகும் என்றார்.

Indi Park Village இந்தியா – பாகிஸ்தான் எல்லை கிராம மக்களின் நிலைஇன்னொருவர் பேசும் போது, இது எங்கள் முன்னோர்கள் வாழ்ந்த இடம் என்பதால், எந்த துன்பம் வந்தாலும் இந்தப் பகுதியை விட்டு வெளியேற மாட்டோம் என்றும் எப்படியோ எங்கள் வாழ்க்கையை நாங்கள் வாழ்ந்து தான் ஆகவேண்டும் என்றும் கூறினார்.

சகோத்திக்கு வரும் பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள், எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகிலுள்ள கிராமங்களில் இரு்து பெருமளவில் மக்கள் வெளியேற இந்தியாவே காரணம் என்று கூறினார்.

பாகிஸ்தான் தங்களின் மக்களை எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு மிக அருகில் இருந்து ஏன் இடம்மாற்றம் செய்ய முயற்சிக்கவில்லை என்ற கேள்விக்கு அவர் பதில் எதுவும் அளிக்கவில்லை. மேலும் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகே வாழும் மக்கள் தொடர்பாக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளைப் போல பாகிஸ்தானும் நடவடிக்கை மேற்கொள்ளுமா என்று கேட்டதற்கு இல்லை என அந்த அதிகாரி பதிலளித்தார்.

மற்றுமோர் அதிகாரி கருத்துத் தெரிவிக்கையில், இங்கிருந்து மக்கள் வெகு தூரம் செல்ல வேண்டாம். எங்களால் அவர்களை பாதுகாக்க முடிகிற வரையில் நாங்கள் அவர்களை இங்கு வாழ அனுமதிப்போம். தங்கள் நாட்டை மிகவும் நேசிக்கும் மக்கள் வேறு இடத்திற்குச் செல்ல மாட்டார்கள் என தெரிவித்தார்.

இந்த எல்லைக்கோட்டுக்கு அருகில் வாழ்வது மிகவும் எளிதான விடயம் அல்ல. 2015முதல் எல்லை தாண்டிய மோதல்களால் ஏறக்குறைய 70பேர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். அதிலும் இந்த ஆண்டு மட்டும் 27பேர் இறந்துள்ளனர். சில வாரங்களுக்கு முன்னர் இந்தப் பகுதியில் 45 வயதான ஒருவரும், 3 வயது சிறுமியும் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி இறந்துள்ளனர்.

இந்திய நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரில் மனித உரிமை மீறல்களை முடிவிற்குக் கொண்டுவர வேண்டுமென சர்வதேச சமூகத்தையும், இஸ்லாமிய நாடுகளையும் பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. ஆனால் பெரும்பாலான நாடுகள் காஷ்மீர் இருதரப்பு பிரச்சினை என்றும், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் இதனை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறுகின்றன.

இந்தியாவுடனான போர் அபாயம் குறித்து மக்கள் பேசும் போது, நாட்டிற்காக தாங்கள் சாகவும் தயாராக உள்ளதாகவும், யுத்தத்தின் மூலம் இளைய சமுதாயத்தினர் உயிரிழப்பதை இனியும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஒரு முதியவர் கூறினார். இறந்த சடலங்களை இனியும் எங்களால் காண முடியாது என்றும், எல்லைக்கு அப்பாலுள்ள மக்களும் தங்களைப் போன்றவர்களே அவர்களுக்கு நாங்கள் கெடுதல் நினைக்க மாட்டோம் என்றும் கூறினார்.