இந்தியா இல்லையேல் கொழும்பு துறைமுகத்திற்கு எதிர்காலம் இல்லை – அமெரிக்கா

இந்தியாவுக்கு கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு பகுதி கொள்கலன் கையாளுதல் திட்டதில் நன்மை உண்டோ இல்லையோ ஆனால் இந்தியா இல்லாமல் அதற்கு எதிர்காலம் இல்லை என சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா ரெப்லிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இந்த துறைமுக அபிவிருத்தியில் தனியார் துறையினருக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். அது தான் சிறீலங்காவின் பொருளாதாரத்தை உயர்த்தும்.

சிறீலங்காவுக்கும், சீனாவுக்குமான உறவுகள் வெளிப்படையானதாக இருக்க வேண்டும். நாம் அதனை உன்னிப்பாக கவனிக்கின்றோம்.

நாம் சிறீலங்காவில் எரிசக்தி திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் ஆனால் அதற்குரிய நிறுவனங்களை அரசு நீதியுடன் நடத்த வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடருக்கு சிறீலங்கா அரசு ஒரு ஆக்கபூர்வமான திட்டத்துடனும், வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் திட்டத்துடனும் வரவேண்டும்.

சில வாக்குறுகளையாவது சிறீலங்கா நிறைவேற்றுவதை நாம் காணவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.