இந்தியாவுக்கான தூதுவராக மிலிந்த மொரகொடை? அமைச்சரவை அந்தஸ்த்துடன் பதவியேற்பார்

இந்தியாவுக்கான புதிய தூதுவராக முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொட நியமிக்கப்படவுள்ளார். அமைச்சரவை அமைச்சருக்குரிய அதிகாரங்களுடன், மிலிந்த மொறகொடவை இந்தியாவுக்கான தூதுவராக நியமிப்பதற்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்தியாவுக்கான தூதுவராக மிலிந்த மொறகொடவை நியமிப்பதற்கான பரிந்துரை, உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.