இந்தியாவில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த ஐ.எஸ் திட்டம் அமெரிக்கா தகவல்

இதியாவில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக அமெரிக்கா அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தும் தீவிரவாத அமைப்புகளில் மக்கியமாக கருதப்படுவது ஐ.எஸ் இயக்கமாகும். இந்த இயக்கத்தின் நடவடிக்கைகளை அமெரிக்கா மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றது.

அதன் அடிப்படையில் ஒரு முக்கிய தகவலை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அதாவது, இந்தியாவில் இந்த இயக்கம் மிகப் பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டதாக அமெரிக்கப் பாதுகாப்பு உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய, அமெரிக்க வம்சாவளி செனட் உறுப்பினரான மேகி ஹசன் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போதே தீவிரவாதத்திற்கு எதிரான மையத்தின் இயக்குநர் பொறுப்பில் இருக்கும் ரசல் டிராவர்ஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐ.எஸ் இயக்கத்தில் பல்வேறு கிளைகள் இருந்தாலும், ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற அமைப்பே தெற்காசியாவில் தீவிரவாத செயல்களை அரங்கேற்றுவதற்காக இருக்கும் அமைப்பாகும்.

அனைவரின் கவனத்தையும் ஈர்க்க ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தியது. அதே நேரத்தில் இந்தியாவில் கடந்த ஆண்டு தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியது. ஆனால் அந்தத் திட்டம் வெற்றி பெறவில்லை. மாறாக, தோல்வியில் முடிந்தது.

முன்னதாக, ஐ.எஸ் அமைப்பில் கிட்டத்தட்ட 20 கிளைகள் இயங்கி வருகின்றன. முழுக்க, முழுக்க நவீன தொழில்நுட்பத்தை அவர் கையாள்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னால் நியூயோர்க்கில் தாக்குதல் நடத்த முயற்சித்தது.

FBI இன் நடவடிக்கையால் அந்த திட்டம் முறியடிக்கப்பட்டது. பின்னர் 2017ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோமில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5பேர் கொல்லப்பட்டனர்.

நிச்சயமாக ஆப்கானிஸ்தானை தவிர்த்து மற்ற நாடுகளில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் தீவிரவாத தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடுவர்.