இந்தியாவில் உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையம் அமைக்கும் பிரான்ஸ்

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் ஜைதாபூரில், உலகிலேயே மிகப்பெரிய அணுமின் உற்பத்தி நிலையத்தைக் கட்ட உள்ளதாக பிரான்ஸை சேர்ந்த எரிசக்தி நிறுவனமான ஈ.டி.எஃப் தெரிவித்துள்ளது.

இந்த அணுமின் நிலையத் திட்டம் அப்பகுதி மக்களின் எதிர்ப்பையடுத்து நீண்ட காலமாக கைவிடப்பட்டிருந்த நிலையில், அம்மாநிலத்தின் பொறியியல் நுட்பங்களையும், உபகரணங்களையும் வழங்கி இ.பி.ஆர் அணு உலைகளை உருவாக்கவுள்ளதாக ஈ.டி.எஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இத் திட்டத்தின் மூலம், 10கிகாவோட்ஸ் (GW) மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதோடு, 70 மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க முடியும் என்றும் 25,000பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கலாம் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.