இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்- ஆதரவுக் கரம் நீட்டும் உலக நாடுகள்

இந்தியாவில்  தினந்தோறும் 3 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தலைநகர் டெல்லியில் ஓஜ்சிஜன் பற்றாக்குறை காரணமாக கடந்த சில நாட்களில் 50க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் பாகிஸ்தான், பிரான்ஸ், பூடான், ஆஸ்திரேலியா,அமெரிக்கா,சீனா மற்றும் ரஷ்சியா போன்ற நாடுகள் உதவ முன்வந்துள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தீவிரமாகியுள்ளமை குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதுடன், தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் இந்திய அரசு மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தேவையான உதவிகளை விரைவாக அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர்  தெரிவித்துள்ளார்.

அதே போல்,  “ 3,00,000 முதல் 4,00,000 வரையிலான ரெம்டெசிவிர் மருந்துகள் மற்றும் ஓஜ்சிஜன் இந்தியாவுக்கு இன்னும் 15 நாட்களில் வர உள்ளன” என்று  ரஷ்சியா வெளியிட்டுள்ள அறிககையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “இந்த உலகத்திலும், அண்டை நாட்டிலும் கொரோனா வைரஸால் யாரெல்லாம் பாதிக்கப் பட்டுள்ளார்களோ அவர்கள் விரைந்து குணமடைய நாங்கள் பிரார்த்தனை செய்வோம்.

இந்த கொரோனா வைரஸுக்கு எதிரான ஆபத்தான போரில் ஈடுபட்டுள்ள, இந்தக் கடினமான நேரத்தில் இந்திய மக்களுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம் என்பதை நான் தெரிவிக்க விரும்புகிறேன். உலக அளவில் சவாலாக இருந்துவரும் இந்த கொரோனா வைரஸுக்கு எதிராக மனித சமுதாயம் ஒன்றாக இணைந்து போரிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.