ஆஸ்திரேலிய மக்கள் தொகையை விட அதிகமான பெண்கள் அடிமைத்தனத்தில் சிக்கியுள்ளனர்: புதிய அறிக்கையில் அதிர்ச்சி 

உலகளவில் கட்டாய உழைப்பு, கட்டாய திருமணம், கடனுக்கான கொத்தடிமை உள்ளிட்ட நவீனஅடிமைத்தனத்தில் 2.9 கோடி பெண்கள்பாதிக்கப்பட்டுள்ளதாக ‘Stacked Odds’ என்ற புதியஅறிக்கையில் இத்தகவல் வெளியாகியுள்ளது. 

‘Stacked Odds’ எனும் இந்த அறிக்கை சர்வதேச தொழிலாளர் அமைப்பு, புலம்பெயர்வோருக்கான சர்வதேச அமைப்பு, மற்றும் Walk Free ஆகிய அமைப்புகளின் கூட்டுழைப்பில் வெளியாகியுள்ளது.

இந்த அறிக்கையின் அடிப்படையில், சராசரியாக 130 பெண்களில் ஒரு பெண் நவீன அடிமைத்தனத்தில் சிக்கியுள்ளதாகவும் இவ்வாறான சிக்கியுள்ள மொத்த பெண்களின் எண்ணிக்கை ஆஸ்திரேலிய மக்கள்தொகையைக் காட்டிலும் கூடுதலானது என்றும் கூறப்படுகின்றது.

“எதார்த்தம் என்னவென்றால் மனிதகுல வரலாற்றில் முன்னெப்போதும் விட தற்போது அடிமைத்தனத்தில் பெரும் அளவிலான மக்கள் வாழ்கின்றனர்,” எனக் கூறியுள்ளார் அடிமைத்தனத்திற்கு எதிரான Walk Free அமைப்பின் இணை நிறுவனர் கிரேஸ் பார்ரஸ்ட்.

மொத்தம் பாதிக்கப்பட்டுள்ள பெண்களில் 99 சதவீதமான பெண்கள் கட்டாய பாலியல் சுரண்டல், 84 சதவீதமான பெண்கள் கட்டாயத் திருமணம், 58 சதவீதமான கட்டாய உழைப்பில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது இந்த அறிக்கை.

“நாம் தினமும் வாங்கி பயன்படுத்தும் உடை, காபி, தொழில்நுட்பம் உள்ளி விநியோக சங்கிலியில் பெண்கள் எதிர்ப்பார்க்காத சுரண்டல் மற்றும் கட்டாய உழைப்புக்கு ஆளாகின்றனர்,” என்கிறார் கிரேஸ் பார்ரஸ்ட்.

நவீன அடிமைத்தனத்தை ஒழிக்கக்கோரி Walk Free மற்றும் ஐ.நா.வின் Every Woman Every Child திட்டத்தின் கீழ் உலகளாவிய பிரசாரத்தை தொடங்குவதாக பார்ரஸ்ட் கூறியிருக்கிறார். இதன் மூலம் 136 நாடுகளில் இன்னும் குற்றமாக கருதப்படாத குழந்தை மற்றும் கட்டாய திருமணத்தை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.