ஆப்கான் துணை அதிபரை குறிவைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல்

ஆப்கானிஸ்தான் துணை அதிபர் அம்ருல்லா சலேவை குறிவைத்து இன்று(09) நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 10 பேர் பலியாகினர், 15பேர் காயமடைந்துள்ளனர்.

ஆப்கான் தலைநகர் காபுலின் தைமானி பகுதியில் இன்று காலை இந்தக் குண்டுத் தாக்குதல் நடைபெற்றது. இது குறித்து சலேவின் மகன் எபாத் சலேஹ் கூறுகையில், எங்கள் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இருப்பினும் எனக்கும் எனது தந்தைக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. நாங்கள் நலமாக உள்ளோம் என்று கூறினார். சலேவின் பாதுகாவலர்கள் படுகாயமடைந்துள்ளனர். ஆனால் சலேவிற்கு சிறிய காயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

இதுவரை இந்தக் குண்டு வெடிப்பிற்கு எவரும் பொறுப்பேற்கவில்லை.