ஆப்கானிஸ்தானில் பொலிஸ் தலைமையகம் மீது கார்க் குண்டுத் தாக்குதல் 16பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பொலிஸ் தலைமையகம் மீது நடத்தப்பட்ட கார்க் குண்டுத் தாக்குதலில் 16பேர உடல் சிதறிப் பலியாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் கிளர்ச்சியாளர்களுக்கும், அரச படைகளுக்கும் இடையில் கடந்த 19 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகின்றது. அதில் ஆப்கானிஸ்தான் அரசிற்கு ஆதரவாக அமெரிக்கப் படைகள் செயற்பட்டு வருகின்றன. இருந்தும் போரை முடிவிற்குக் கொண்டு வரும் வகையில், அமெரிக்காவிற்கும், தலிபான்களுக்குமிடையில் பேச்சுவாரத்தை உடன்படிக்கைகள் நடைபெற்ற வண்ணமே இருக்கின்றன. கர்த்தார் தலைநகர் தோகாவில் தலிபான்களுக்கும், ஆப்கானிஸ்தான் அரசிற்குமிடையே பேச்சுவாரத்தை நடைபெறுகின்றது.

அமைதிப் பேச்சுவர்த்தைகள் ஒருபுறம் நடைபெற்று வந்தாலும், தலிபான் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

இதேவேளை ஆப்கானிஸ்தான் ஹார் மாகாணத்தில் பொலிஸ் தலைமையத்தின் அருகில் இன்று(19) காலை 11.30 மணியளவில் வெடிகுண்டுகளுடன் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென வெடித்துச் சிதறியது.

இந்தத் தாக்குதலில் 16பேர் உடல் சிதறிப் பலியாகினர். மேலும் 90பேர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு தலிபான் கிளர்ச்சியாளர்கள் தான் காரணம் என பாதுகாப்புப் பிரிவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இரு தரப்பினரதும் தாக்குதல்கள் அமைதிப் பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் செயலாகவே கருதப்படுகின்றது.