ஆப்கானில் தலிபான் கைதிகள் விடுதலை தாமதமானதால், அமைதிப் பேச்சுக்கள் தாமதம்

ஆப்கானில் தலிபான் கைதிகளை ஆப்கான் அரசு விடுதலை செய்யத் தாமதம் ஆகியதால் ஆப்கான் அரசிற்கும் தலிபான் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தாமதமாகலாம் என அறிவிக்கப்படுகின்றது.

ஆப்கானில் தலிபான்களுக்கும், ஆப்கான் அரசிற்கும் இடையில் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவிற்குக் கொண்டு வருவதற்காக தலிபான்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று ஆப்கான் அரசு தலிபான் கைதிகளை படிப்படியாக விடுவித்து வருகின்றது.

அதேவேளை தலிபான்களுக்கும், ஆப்கான் அரசிற்கும் இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக கைதிகளின் விடுதலை தாமதமாகின்றது.

மேலும் நேற்று(07) தோஹா செல்லவிருந்த தலிபான் பிரதிநிதிகள் அங்கு செல்லவில்லை. இருந்தும் இன்று செல்லக்கூடும் என ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்தனர். அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து திட்டமிடும் நடவடிக்கைகள் தாமதம் ஆவதால், அமைதிப் பேச்சுவார்த்தையும் தாமதமாகும் என தெரியவந்துள்ளது.