ஆபிரிக்க நாடுகளில் கால்பதிக்க இந்தியா முயற்சி

சீனாவுக்கு போட்டியாக வர்த்தகத்தை பலப்படுத்தும் நோக்கத்துடன் ஆபிரிக்க நாடுகளை இந்திய குறிவைத்து வருகின்றது. அதன் ஒரு அங்கமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கர் நான்கு நாள் பயணமாக கடந்த புதன்கிழமை (5) தன்சானியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்தியாவின் குடிநீர்த் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் சன்சிபார் பகுதிக்கும் அவர் பயணம் மேற்கொள்ளவுள்ளார். தன்சானியாவில் உள்ள வர்த்தகர்களை சந்திப்பதுடன், தன்சானியாவின் வெளிவிவகார அமைச்சரையும் சந்திக்கவுள்ளார். மேலும் நாடாளுமன்ற நட்புறவுக் குழுவுடனும், தன்சானியாவில் உள்ள இந்திய மக்களுடனும் அவர் கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

சன்சிபார் பகுதியில் இந்தியாவின் Indian Institute of Technology நிறுவனம் பல்கலைக்கழகம் ஒன்றை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் திறந்துவைக்கவுள்ளது.

42 ஆபிரிக்க நாடுகளுக்கு இந்தியா 32 பில்லியன் கடன் உதவிகளை கடந்த 10 வருடங்களில் மேற்கொண்டுள்ளதாக இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கி தெரிவித்துள்ளது. 12 பில்லியன் டொலர்கள் பெறுமதியான 195 புதிய திட்டங்களையும் ஆபிரிக்க நாடுகளில் இந்திய ஆரம்பித்துள்ளது.

ஆபிரிக்க நாடுகளின் 700 பில்லியன் டொலர் கடன் தொகையில் சீனா 12 விகித்தை கொண்டுள்ளதுடன், ஆபிரிக்க நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக்கம் கடந்த வருடம் 282 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளது. அது இந்த வரும் மேலும் 16 விகிதம் அதிகரித்துள்ளது.