ஆண் குழந்தை பிறக்க வேண்டும் – பெண்களின் புதினமான வேண்டுதல்!

சத்தீஸ்கரின்  ராய்ப்பூருக்கு தெற்கே 66 கி.மீ தொலைவில் உள்ள தம்தாரி மாவட்டத்தில் தீபாவளிக்குப் பின் முதல் கடந்த 21ம் திகதி மடய் மேளா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த மக்களின் நம்பிக்கையின்படி, திருமணமான ஒரு பெண் தம்தாரியில் உள்ள அங்கர்மோட்டி தெய்வத்தின் கோயிலுக்கு பிரசாதத்துடன் வந்தால் ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பார் என நம்புகிறார்கள். பைகா பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தலைவிரி கோலத்தில், குப்புற படுத்து இருக்க அந்தக் கோயில்பூசாரிகள்  அவர்கள் மீது நடக்கிறார்கள். அப்படி அவர்கள் நடந்தால் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று நம்புகிறார்கள்.

ஆண் குழந்தைக்காக வேண்டுதல்.. குப்புற படுத்திருக்கும் பெண்கள் மீது நடந்துசென்ற கோவில் பூசாரிகள்boy baby wish granting festival people ignore covid and priests walked on ...

கொரோனா வைரஸ் தொற்று இருந்தபோதிலும், 200-க்கும் மேற்பட்ட பெண்கள் முகக்கவசங்கள் இல்லாமல் சடங்கில் பங்கேற்க தம்தாரி மாவட்டத்திற்கு வந்தனர். சமூக விலகல் கடைபிடிக்காமல், பங்கேற்பாளர்கள் மற்றும் வேடிக்கை பார்த்தவர்கள் நடந்துகொண்டனர்.

தீபாவளிக்கு மறுநாள்  துர்க் மாவட்டத்தில் நடைமுறையில் இருக்கும் “பிரார்த்தனைகளை நிறைவேற்றும்” சாட்டையடி சடங்கில் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் பங்கேற்ற சில நாட்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.