அஸ்ஸாமில் பாஜக வுக்கெதிராக கடும் போராட்டம் வெடித்துள்ளது.

அஸ்ஸாம் மாநில முதல்வர் சோனோவால் உட்பட பாஜக தலைவர்களும், ஆர்எஸ்எஸ் தலைவர்களுக்கும் எதிராகக் கடுமையான விமரிசனம் முன்வைக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், அஸ்ஸாம் மாநில முதல்வர் சர்பானந்தா சோனோவால் மற்றும் மத்திய இணை அமைச்சர் ரமேஸ்வர் தெலி மற்றும் பாஜக தலைவர்கள் சிலரது வீடுகளையும் போராட்டக்காரர்கள் தாக்கியதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

திப்ருகரில் உள்ள முதல்வரின் வீடு மீது நேற்று இரவு போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். அதே சமயம், மத்திய இணை அமைச்சர் ரமேஸ்வரின் வீட்டையும் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

பாஜக எம்எல்ஏ பிரஷாந்தா புகானின் வீடு, போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது. மாநிலம் முழுவதும் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகங்களிலும் பல இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அஸ்ஸாம் மற்றும் திரிபுராவில் இந்த மசோதாவுக்கு எதிராகக் கடுமையான போராட்டங்கள் வெடித்துள்ளன.